களுத்துறையில் இடம்பெற்ற கோர விபத்து - ஸ்தலத்தில் இருவர் பலி!
Sri Lanka Police
Kalutara
Sri Lanka
Accident
By Kalaimathy
களுத்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை - பண்டாரகம வீதியின் கோனடுவ பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 18 வயது நிரம்பிய யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும் சந்தேஸ் சுலோச்சனா பியரத்ன என்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்கள் வாத்துவ பொதுப்பிட்டிய மற்றும் தெல்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசாரணை
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை பண்டாரகம பிரதேச காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனையின் பின் இருவரின் உடலும் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி