கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்திய கணவனுக்கு நீதிமன்றின் உத்தரவு!
கிளிநொச்சி - அக்கராயன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறு முற்றியதில் கர்ப்பிணி மனைவி மீது, கணவன், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அதனையடுத்து சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார். பின்னர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விளக்கமறியல்
வழக்கை விசாரணை செய்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட போது மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
துப்பாக்கி சூடு நடத்திய கணவன் 40 வயதானவர் எனவும், மனைவிக்கு 33 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
