லாஃப்ஸ் நிறுவனமும் சமையல் எரிவாயுக்களின் விலைகளை குறைத்தது!
Sri Lanka Economic Crisis
LAUGFS Gas PLC
Economy of Sri Lanka
Laugfs Gas Price
By Pakirathan
இலங்கையில் தொடர்ச்சியாக பல பொருட்களின் விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை குறைத்ததை தொடர்ந்து, தற்போது லாஃப்ஸ் நிறுவனமும் தனது சமையல் எரிவாயுக்களின் விலைகளை குறைத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலையானது 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன்படி புதிய விலையானது 3,990 ரூபாவாக மாற்றமடையும்.
அதேசமயம், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையானது 1,596 ரூபாவாக மாற்றமடையும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்