இலங்கையில் முன்னணி பாடசாலை ஒன்றில் நடந்த தாக்குதல்
Attempted Murder
Sri Lanka Police Investigation
Sri Lankan Schools
By Sumithiran
கரந்தெனிய முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் கத்தியால் குத்தியதில் அம்மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் பதினொராம் தரத்தில் கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி

அதே பாடசாலையில் பன்னிரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவனே கத்திக்குத்து தாக்குதலை நடத்தியதாகவும் காயமடைந்த மாணவன் எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவன் கைது

கத்தியால் குத்திய மாணவனை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி