லிட்ரோ எரிவாயு விலை குறைப்புத் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Kalaimathy
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும் எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவு முதலே லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி