குறைகிறது விலை - முற்றுப்பெறும் வரிசை யுகம்; மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இன்றைய தினத்திற்கு பின்னர் எரிவாயு விலை நிச்சயம் குறையும் என்பதை தான் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது,
“புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கமைய, இந்த எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. தற்போது எங்களிடம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது.
வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை
ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் வரை நாட்டிற்கு வரும் கப்பல்கள் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது கொள்வனவு செய்யப்பட்டவைகள் அனைத்தும் விநியோகிக்கப்படும்.
இனிமேல் ஒரு போதும் எரிவாயு வரிசைகள் ஏற்படாது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)