பதவி மோகத்தால் அலையும் ராஜபக்ச குடும்பம் : உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதாக சமல் அறிவிப்பு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa), சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் வைத்து நேற்று (09.03.2025)ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமல் ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன
SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.
அரசியலில் ஒருவர் மேலேயோ கீழேயோ இருக்க முடியும் என்று கூறிய சமல் ராஜபக்ச, மீண்டும் ஒருமுறை கீழிருந்து தொடங்கப் போவதாகக் கூறினார்.
மேலும், “இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று சமல் ராஜபக்ச கூறியபோது பலர் நக்கலாக சிரித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாகவும் கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்