பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்!

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka Government Of Sri Lanka
By Kalaimathy Jul 06, 2022 07:40 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

சிறிலங்கா அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவே அரசாங்கத்தினால் புலி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

ஜுலை 05 மற்றும் 06ம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் தலைவர் க.இன்பராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், 

விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவும் அதற்காக அவர்களே ஏதேனும் செய்து விட்டு விடுதலைப்புலிகள் மீது பழிகளைச் சுமத்திவிடும் நோக்கோடும் இவ்வாறான செய்தியை அரசாங்கம் வெளியிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் தேவையற்ற வதந்தியை பரப்பும் அரசாங்கம்

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

ஜுலை 05 கரும்புலிகள் தினம், அத்தினத்திலும் 06ம் திகதியும் விடுதலைப்புலிகள் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அபாண்டமான பொய் வதந்தியை பரப்பி பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்கள் மத்தியில் ஒரு பீதியை உண்டாக்கும் நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம் கதையொன்றைக் கட்டவிழ்த்துள்ளது.

விடுதலைப்புலிகளினால் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற கருத்து முற்று முழுக்க பொய்யான கருத்து. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தினை ஏற்படுத்தி எமது மக்களை இன்னும் அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் சார்பில் எவரும் இல்லை என்பதனை விடுதலைப்புலிகள் கட்சியினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசியல் நீரோட்டத்தில் இணைந்த முன்னாள் போராளிகள்

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

2009ம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு முன்னாள் போராளிகள் ஆகிய நாங்கள் ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீள உருவாகப் போகின்றார்கள் என சிறிலங்கா அரசு மாத்திரமல்லாது இந்திய அரசு கூட கடந்த சில மாதங்களின் முன்னர் கருத்து வெளியிட்டிருந்தது.

இதனை மறுத்தும் நாங்கள ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டிருநதோம். உண்மையிலேயே சிறிலங்கா அரசும், இந்திய அரசும் விடுதலைப்புலிகளை வைத்துப் பந்தாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வித அரசியற் செயற்பாடுகளையும் முன்நகர்த்த முடியாமல் இருக்கின்றார்கள். எனவே ஜூலை 05, 06ம் திகதிகளில குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவலுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இலங்கை மக்கள் அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் வேண்டுகோளையும் முன் வைக்கின்றோம்.

எக்காலத்திலும் விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம். விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தற்போது அரசுக்கெதிராகப் போராடும் மக்களை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறானதொரு செய்தியை அரசாங்கம் மக்கள் மத்தியில் வெளியிட்டிருக்கின்றது.

தங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பாடுபடும் முன்னாள் போராளிகள்

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

இன்று வடக்கு கிழக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் பன்னிரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின்றார்கள். அவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து இன்று அப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு இன்றைய நிலையில் தாயகத்தில் தங்கள் குடும்பங்களையும் தங்களையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அபாண்டமானதொரு பொய்யை வெளியிட்டு அவர்களை அச்சப்படுத்தி மீண்டும் மீண்டும் இவ்வாறானதொரு கட்டுக் கதைகளைக் கட்டிவிட்டு அவ்வாறானதொரு நிலைக்கு அவர்களை மீண்டும் தள்ளிவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்களின் சுய அரசியல் ரீதியில் முன்னேற்றத்தைக் கொண்டு செல்லாம், இதனைக் காட்டி வெளிநாடுகளில இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தின் நோக்கமே இந்த அறிக்கையில் வெளிப்படுகின்றது.

இலங்கை மீது பொருளாதார தடை

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

சிறிலங்கா அரசின் இந்தத் திட்டம் இனியொரு போதும் நடைபெறாது. இவ்வாறான பொய் வதந்திகளைக் கட்டிவிட்டே சிறிலங்கா அரசு எமது மக்கள் மீது பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது மட்டுமல்லாது எமது தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடையையும் விதித்திருந்தது.

எமது தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் இன்று கடவுளின் வழியாக இலங்கையின் மீது ஒட்டுமொத்த நாடுகளும் சேர்ந்து பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

கோட்டா மஹிந்த அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் இன்று தங்களுக்கு இவ்வாறானதொரு நிலை வரும் என்று. அவர்கள் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவம் அவர்கள் தங்கள் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடியாத அளவிற்கு அவர்களின் மக்களினாலேயே விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

தமிழர் நிலங்களை அபகரிக்கும் சிறிலங்கா அரசு

பொய் வதந்திகளை பரப்பியே தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! | Sri Lanka Ltte Government Batticalo Bomb Blast

இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசு எமது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது எமது நிலங்கள் அபகரிப்பு, திட்டமிட்ட மீள் குடியேற்றம் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை இந்த அரசாங்கங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கோட்டாபய வீட்டுக்குச் சென்றாலும் இனிவரும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் மூவின மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம்.

விடுதலைப்புலிகளைச் சொல்லி சொல்லி அரசியல் நாடகம் நடத்துவது இலங்கை அரசாங்கத்திற்குப் புதியதல்ல. எமது தமிழ் மக்களின் ஒவ்வொரு நினைவேந்தல்களின் போதும் இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களை வீட்டில் முடக்குவதோடு மட்டுமல்லாது இலங்கை அரசு அவர்களே ஏதேனும் செய்து விட்டு விடுதலைப்புலிகள் மீது பழிகளைச் சுமத்துவதற்காகவும் இவ்வாறான செய்தியை வெளியிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கத் தோணுகின்றது என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021