ஒருபோதும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லமாட்டோம்- நாமல் பதிலடி!

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Maldives
By Kalaimathy May 24, 2022 11:25 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தற்காலிகமாக மாலைதீவுக்கு செல்லவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத் தற்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்ததாக The Maldives Journal என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த சோனு ஷிவ்தாசானி என்பவர் ராஜபக்ச குடும்பத்திற்கு ஒரு தனி இல்லத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் மாலைத்தீவின் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

ஒருபோதும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லமாட்டோம்-  நாமல் பதிலடி! | Sri Lanka Maldives Mahinda Namal Dollar

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தனது தந்தைக்கு சிறிலங்காவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் உறுதியளித்தார். மேலும் தனது தந்தை மாலைதீவுக்கு செல்லவோ அல்லது பாதுகாப்பு புகலிடத்திற்காக தனி இல்லம் ஒன்றை வாங்கவோ எந்தவித திட்டங்களும் இல்லை எனவும் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆகவே மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் அதிக வாசகர்களை ஈர்க்கும் வகையில் விஷயங்களை பரபரப்பாக்குகின்றன, இந்த செய்தி மூலம் மாலைதீவு மற்றும் இலங்கை வாசகர்களை அதிகளவில் ஈர்க்கும் செயற்பாடே இது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லமாட்டோம்-  நாமல் பதிலடி! | Sri Lanka Maldives Mahinda Namal Dollar

ஆகவே எனது தந்தைக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை, மேலும் அவர் மாலைதீவுக்கு மாறப்போவதாகவோ அல்லது தனி இல்லத்தை வாங்குவதற்கோ எந்த திட்டமும் இல்லை என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாமலின் இந்த மறுப்பு அறிக்கையையடுத்து,  மாலத்தீவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஒருவர் மீள் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒருபோதும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லமாட்டோம்-  நாமல் பதிலடி! | Sri Lanka Maldives Mahinda Namal Dollar

அதில், மாலைதீவு சபாநாயகர் நஷீத்துக்கு மகிந்தவின் குடும்பத்தின் கடவுச்சீட்டுகளின் நகல்கள் ஏன் அனுப்பப்பட்டன என்பதை விளக்குமாறு கோரியிருந்தார். அவ்வாறு அனுப்பப்பட்ட நகல்கள் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்தாதடு,

மாலைதீவு ஊடகவியலாளர் நாமல் ராஜபக்சவின் கடவுச்சீட்டு விபரங்களின் பிரதியொன்றையும் தனது டுவிட்டர் பரிமாற்றத்தில் நாமலின் டுவிட்டருடன் இணைத்து பகிர்ந்துள்ளார்.

இதன் போது ஊடகவியலாளருக்குப் பதிலளித்த நாமல்,

அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று உறுதியளிக்க முடியும் என்று கூறினார். அவ்வாறான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  மேலும் மாலைதீவு மற்றும் இலங்கையின் மக்கள் மத்தியில் நட்பு எப்போதும் வலுவாக உள்ளது.

இந்த நட்பின் சிறந்த நலனுக்காகவே உள்நாட்டு அரசியலை நாங்கள் ஒதுக்கி வைப்பது என்று தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்தோம் என நாமல் ராஜபகச மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத்,

ராஜபக்சக்கள் தொடர்பில் மாலைதீவு சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையை மறுத்துள்ளார்.

அந்த சஞ்சிகையில் உள்ள கதை முற்றிலும் புனைகதை என்று அவர் கூறினார். "தங்கள் பொய்களின் மூலம், அதன் பின்னணியில் உள்ளவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு பெரும் அவதூறு செய்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024