முதல் முறையாக நீலநிற பேருந்தில் சென்ற ஒருவர் :ஜப்பானில் உள்ள இலங்கையருக்கு ஏற்பட்ட சந்தோஷம்
Anura Kumara Dissanayaka
Japan
Ranil Wickremesinghe Arrested
By Sumithiran
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (28) காலை, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.
கூடியிருந்த பலருக்கும் ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
நீல நிற பேருந்தில் பயணிப்பதைக் கண்டு மகிழ்ச்சி
தேர்தலுக்கு முன்னர் ஜப்பானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது போல், மூடப்பட்ட அனைத்து கோப்புகளையும் திறந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவர், "ஒருபோதும் பேருந்தில் பயணிக்காத ஒருவர் நீல நிற பேருந்தில் பயணிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்" என்று கூறினார்.
ஜனாதிபதியும் கூடியிருந்த பார்வையாளர்களும் சிரித்தனர், மேலும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அன்று தனியாக ஒரு போத்தல் மது அருந்தியதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
