முல்லைத்தீவில் பல மாணவிகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் - கிளர்ந்தெழுந்த பெண்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரைத் தேடி காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல மாணவிகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் இன்று காலை பத்து மணிக்கு பெண்கள் பலர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது எனவும் இவர்களுக்கு வழங்கும் அதிகபட்ச தண்டனையானது இனி இவ்வாறான செயற்பாட்டை வேறு ஒருவர் செய்ய எண்ணாத அளவில் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





