வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்- பெண் அடித்துக் கொலை!
பெண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
ரிதீகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தையில் உள்ள தேவாலய சந்தி பகுதியிலேயே பெண் ஒருவர் தலைக் கவசத்தால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ரிதீகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையயில்,
கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.
அதனையடுத்து விபத்திற்குள்ளான பெண்ணின் தாயார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தேடிச் சென்று விபத்து குறித்து விசாரித்ததில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன்போது, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தனது கையிலிருந்த பாதுகாப்பு தலைக்கவசத்தால் குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ரிதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிதீகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
