இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் யாழில் கைது!
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்குத் தெற்குப் பகுதியில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இச்சந்தேகநபர்கள் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
இலங்கைக் கடற்படையின் 'சாமுத்ரா' கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த கடற்றொழிலாளர்களும் மீன்பிடிப் படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளளனர்.
இந்தநிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |