மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி? ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் ஆளும் தரப்பு!
நுகேகொடை மிரிஹானவில் நேற்றிரவு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டம் எனக் கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் பின்னணியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராக தெரிவாகிய ஒருவர் அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்கான புகைப்படங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்றன.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எந்த தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என கோட்டாபய ஆலோசனை வழங்கி இருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பொது சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதால், குறைந்த பலத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்