எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 3 மாவட்டங்களில் ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்: வெளியான அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.
இதன்படி, மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்துக்கு நாளாந்தம் பெருமளவானோர் வருகைதந்தபடி உள்ளனர்.
இதேவேளை, நாட்டில் தற்பொழுது கடுமையான எரிபொருள் நெருக்கடி நிலவுவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இவற்றை கருத்திற்கொண்டு மேலும் 3 மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு சேவைகள் ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழிலும் கடவுச்சீட்டு கடவுச்சீட்டு
ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்காக யாழ்ப்பாணத்திலும் பிராந்திய அலுவலகம் அமைத்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்தி, யாழிலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்: புதிய திட்டம் ஆரம்பம்
