இலங்கையில் ஹோட்டலொன்றில் மலைக்க வைக்கும் ஒரேஞ் ஜூஸ் விலை
Orange
Economy of Sri Lanka
Money
By Laksi
இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டின் பிரதி
இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
இதில் ஒரேஞ் ஜூஸின் விலை 4565 ரூபா எனவும், வரிகள் 1055 ரூபா எனவும், சேவைக் கட்டணம் 456 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பில் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வரி விதிப்பு
அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கள் காரணமாக பல ஹோட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி