தீர்மானிக்கப்பட்டது வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு திகதி!
சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன சிறிலங்கா அமைச்சரவையில் முன்வைத்த 2023ஆம் நிதியாண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கான உத்தேச வேலைத்திட்டத்தையடுத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு
இதேவேளை வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சித் திட்டத்தின்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 8ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
