சிறிலங்க நாடாளுமன்ற புதிய நியமனங்கள்
சிறிலங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்க நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(19) புதிய உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு மற்றும் பொது நிதி தொடர்பான குழு ஆகியவற்றில் பணியாற்றுவதற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ் அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நியமனங்கள்
இதன்படி, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) புதிய உறுப்பினர்களாக தயாசிறி ஜயசேகர மற்றும் (மேஜர்)
சுதர்சன தெனிபிட்டிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரசன்ன ரணவீர மற்றும் வேலு குமார் ஆகியோர் பொது கணக்குகள் குழுவில் (கோப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா மற்றும் யூ.கே.சுமித் உடுகும்புர ஆகியோர் பொது நிதி தொடர்பான
குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
