சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள காலம் அறிவிப்பு
Sri Lanka Parliament
Sri Lankan Peoples
By Dilakshan
சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் போது, ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படும் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது.
தீர்மானம்
இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை முன்னெடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவோடு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி