மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுப்பதே அவசரகால சட்டம்!
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என அக்கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தலைவர் தான் என்றும், கட்சியை உருவாக்கும் வரையிலான அனைத்து கலந்துரையாடல்களிலும் நேரடியாக ஈடுபட்டதாகவும், ஆகவே இது கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதை நன்கு அறிந்தவர் எனவும் தெரிவித்தார்.
வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம்
அத்துடன், அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை நடைமுறைப்படுத்தும் போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுக்கும்.
எனவே தான் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 22 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்