கடவுச்சீட்டு வழங்குவதில் இன்று முதல் புதிய நடைமுறை!!
Immigration
Sri Lanka visa
Department of Immigration & Emigration
Passport
By Kanna
இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
புதிய நடைமுறை
இதன்படி, இன்று முதல் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாளொன்றுக்கு இரண்டு முறை நியமிக்கப்பட்டு பணிக்கு அழைக்கப்படுவார்கள்.
இதற்கமைய, காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் அதிகபட்சமாக நாள் ஒன்று 2,000 கடவுச்சீட்டுகள் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றதாகவும் எனினும், இந்த சேவையின் கீழ் இன்று முதல் இந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்