ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை
sri lanka
people
afghanistan
kabul
By Vanan
ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள இலங்கை பிரஜைகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
காபூலில் தற்போது 50 இலங்கை பிரஜைகள் பணிகளில் ஈடுபட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காபூல் நகரிலுள்ள வெளிநாட்டு பிரஜைகளை காபூல் விமான நிலையத்தினுடாக வெளியேற தலிபான்கள் அனுமதி வழங்குவர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தமது இயக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தலிபான்கள் தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி