மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து! சஜித் வெளியிட்ட தகவல்
அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு கூறி அரசாங்கம் புதிய சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளமை, மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுகுழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை எனவும், இந்த நிலையில் அவர்களை சேவைக்கு அழைத்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு தீவிரமான மட்டத்தில் உள்ளது எனவும், இவற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.