நீண்ட நாட்களுக்குப் பின்னர் வடமராச்சி பகுதியில் விநியோகப்பட்ட பெட்ரோல்
Jaffna
Sri Lanka
Petrol diesel price
By pavan
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று வடமராச்சி பகுதியில் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இன்று இவ்வாறு பெட்ரோல் விநியோகம் இடம்பெற்று வருகிறது.
கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் தற்போது விநியோகிக்கப்படுகிறது.
பெட்ரோல் விநியோகத்தின் போது பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அட்டையில் பதியப்பட்டே இவ்வாறு பெட்ரோல் விநியோகம் இடம் பெறுகின்றது.
மோட்டார் சைக்கிளிற்கு ரூபா 1500 உம், முச்சக்கர வண்டிக்கு ரூபா 2000 க்கும்,
மகிழுந்துகளுக்கு ரூபா 7000 க்கும் விநியோகிக்கப்படுகிறது.




4ம் ஆண்டு நினைவஞ்சலி