ராஜபக்சவினர் தொடர்பில் அதிசய பீதி - மிக விரைவில் ராஜபக்சகளின் யுகம்; சூளுரைக்கும் பிரமுகர்!
ராஜபக்சவினர் மீண்டும் எழுவார்கள் எனவும் அது நடக்கும் திகதி காலத்தை கூற முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அதிபரின் சிம்மாசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது அனைவரும் எந்நேரமும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று கூறுகின்றனர். தற்போது ராஜபக்சவினர் இல்லை. மகிந்த ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்.
கனவில் கூட ராஜபக்சாக்களை கண்டு பயப்படுவர்
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்.
ராஜபக்சவினர் தொடர்பாக அதிசயமான பீதி இருக்கின்றது. எந்த நேரமும் ராஜபக்சவினர். இரவு 2, 3 மணிக்கு ராஜபக்சவினரை கனவில் கண்டு விழித்து பயப்படுவார்கள் என நினைக்கின்றேன்.
என்றென்றும் ராஜபக்சவினருடனேயே இருப்போம்
ஊஞ்சல் பின்நோக்கி சென்றால், முன்நோக்கி வரும். நாங்கள் அன்றும் ராஜபக்சவினருடன் இருந்தோம். தற்போதும் ராஜபக்சவினருடன் இருக்கின்றோம். நாளையும் ராஜபக்சவினருடன் இருப்போம்.
ராஜபக்சவினர் மீண்டும் எழுந்து வருவார்கள் அதற்கு நேரம் காலம் இல்லை. அது கட்டாயம் நடக்கும் என நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
