மகிந்த தலைமையில் அவசரமாக கூடும் மொட்டுக்கட்சி
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டம் இன்று (07.06.2024) கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுகிறது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பாகவும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் போட்டி
இதன்போது சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கட்சிக்குள் முக்கிய நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதியளவில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
இதனையடுத்து 16 ஆம் திகதியில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |