மர்மமான முறையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி
வெலிகந்த காவல் நிலைய படைமுகாமில் கடமையாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் படையினர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி இன்று(30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
ஏறவூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமான உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி நிஹால் தல்துவ, “வெலிகந்த காவல் நிலைய படைமுகாமில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் ஏதேனும் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது கொலையா என இதுவரை தெரியவில்லை. பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்தை சோதனை செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.
Sri Lanka Parliament Election 2024 Live Updates
