பணியின்போது அதிகளவில் உயிரிழக்கும் காவல்துறையினர்
Sri Lanka Police
Death
Priyantha Weerasooriya
By Jaso
நாட்டின் பல்வேறு சேவைகளுடன் ஒப்பிடுகையில், பணியின்போது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைச் சந்திக்கும் பிரிவாக இலங்கை காவல்துறை உள்ளது என்றும், இதுவரை சுமார் 200 அதிகாரிகள் பணியின்போது உயிரிழந்துள்ளனர் என்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பியகமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நோய் மற்றும் சாலை விபத்துகள் உள்ளிட்ட காரணங்களால் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
காவல்துறை மா அதிபரின் அறிவிப்பு
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், காவல் நிலைய மட்டத்தில் உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்