உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்! சம்பிக ரணவக்க கோரிக்கை
சம்பிக ரணவக்க கோரிக்கை
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பிக ரணவக்கவின் தலைமையிலான 43ம் படையணி சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரணிலின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டத்துக்கும் பொதுமக்களுக்கும் பொறுப்புக் கூறுவதாக அமைய வேண்டும் எனவும் இது குறித்து கலந்தாலோசிக்க நடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பதில் அதிபராக ரணில்
சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய மக்கள் புரட்சியை அடுத்து கோட்டாபய சிறிலங்காவின் பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.
இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் அதிபராவதை எதிர்த்து கொழும்பு பிரதமர் செயலகத்திற்கு முன்னாள் பாரிய போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
ஆகவே ரணிலின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டத்துக்கும் பொதுமக்களுக்கும் பொறுப்புக் கூறுவதாக அமைய வேண்டும் என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து கலந்தாலோசிக்க நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
