நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் - எச்சரிக்கும் புதிய மார்க்சிச லெனின் கட்சி
நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் உள்ளதாகவும் வரிசை ஏற்படும் அபாயம் தற்பொழுது தலைதூக்க வழி கோருகின்றது எனவும் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கூறியது என்னவென்றால், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதி கிடைத்தவுடன் நாங்கள் இலங்கையை சொர்க்க மாக்குவோம் என கூறியிருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்

உண்மையில் அதுவல்ல பிரச்சனை. 2.9 பில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதியை தான் சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. முழுக் கடனையும் அடைப்பதற்கு நாணய நிதியம் வழங்கி இருக்கவில்லை.
இவர்கள் தொடர்ந்தும் கடன் வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். வேறு வேறு நாடுகள் வேறு வேறு அமைப்புகள், ஊடாக கடன் வாங்குகின்றார்களே தவிர கடன் கொடுப்பதாக இல்லை.
இந்த ETF, EPF போன்ற மிகப்பெரிய நிதி இருக்கின்ற இடத்தில் கை வைத்துள்ளார்கள். அது எடுக்கப்பட்டால் இந்த மக்களுக்கு எதுவுமே இல்லை.
நாட்டினுடைய உற்பத்தி

இந்த ஆட்சியாளர்கள் ஒரு கடனை அடைப்பதற்கு மேலும் பல கடன்களை பெறுகின்றார்கள். இந்த ஆட்சியாளர்கள் வாங்குகின்ற வேலையைத்தான் செய்கின்றார்கள்.
மாறாக நாட்டினுடைய உற்பத்தி மற்றும் மக்கள் இணைந்த உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே இவர்கள் இந்த கடனில் இருந்து தவற முடியும் என்பது நிதர்சனம்.
இதன் மூலம் தான் தேசிய பொருளாதாரத்தை படிப்படியாக கட்டி அமைக்க முடியும்" என்றார்.