பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்!

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Kiruththikan Jul 11, 2022 07:17 AM GMT
Report

தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம்

அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம்கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதி

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்தபடி வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், அரச தலைவர் பதவியை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணிலின் கனவு 

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேறுமானால் இதுவரை காலமும் அரச தலைவர் பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும் என பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றன.

எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், அரச தலைவர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் பரவலாக அரசியல் வட்டாரங்கள் இடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வேட்பாளராக டளஸ்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

இந்தநிலையில் அவர் அரசத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை என்பதும் ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை அரச தலைவராக பதவியேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரச தலைவர் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவர்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

விக்ரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவராக புதன்கிழமை பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது நாடாளுமன்றம் புதிய அரச தலைவரை தெரிவு செய்யும் எனவும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் அரச தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச காணொளி மூலமாக அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுன்றது.

அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் அரச தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள், தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.

முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்.

எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026