தேர்தல்களில் மொட்டுக்கே வெற்றி! அடித்துக் கூறும் மகிந்தவின் சகா
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By pavan
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே அடுத்த தேர்தல்களில் வெற்றி நடைபோடும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அடுத்த அதிபர்த் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார்.
கட்சி எடுக்கும் முடிவு
எனினும், வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
அடுத்த பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே வெற்றி பெறும்.
அதேவேளை, பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. கப்பல் விவகாரம் கூட இதன் ஓர் அங்கம் தான்.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்