சஜித் - மைத்திரிக்கு இடையில் அவசர சந்திப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம்
குறிப்பாக சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
