ரணிலின் ஆட்சியிலும் பசிலின் ஆதிக்கம் - கடுமையாக விமர்சித்த சஜித்
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிப்பது கபுடா (காகம்) தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளுக்கான நியமனம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், அமைச்சுப் பதவிகளுக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று இன்றும் கூட கபுடா தான் பட்டியலை அனுப்புகின்றார்.
பசிலின் ஏற்பாடுகள்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து வழிதவறிச் சென்றவர்கள் எதிர்காலத்தில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கபுடாவின் முன் மண்டியிடும் நிலை ஏற்படும்.
ராஜபக்ச கும்பலை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை அவர் கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
சிக்கிக் கொண்ட ரணில்

மேலும், அதிபர் ரணில் விக்கிரமசிங்க மொட்டுக் கட்சியின் பணயக் கைதியாக சிக்கிக் கொண்டுள்ளார். அவரால் சுயாதீனமாக எதையும் செய்ய முடியாது என்றும் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்