சுயாதீனமாக செயற்பட முடியாவிட்டால் பதவி துறப்பேன் - கபீர் ஹாசிம் அதிரடி அறிவிப்பு!
சுயாதீனமாகச் செயற்பட முடியாவிட்டால் முடிவொன்றை எடுப்பேன் என கோபா குழுவின் தலைவர் பகிரங்கமாகமத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே கோபா குழுவின் தலைவர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப் பதவியை எதிரணிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கோபா குழுவுக்கு நான் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தேன்.
பதவி துறப்புத் தொடர்பான தீர்மானம்
இவ்வாறான நிலையில், “சுயாதீனமாகச் செயற்பட முடியாமற் போனால் கோபா குழுவின் தலைமைப் பதவியை துறப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்.
இதேவேளை, கோப் குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ளமுடியாது. அந்தப் பதவிக்கு எரான் விக்கிரமரத்னவை நியமிக்க எதிரணிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
ஆளும் கட்சி சார்பில் இடம்பெற்ற தெரிவு
கோப் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரஞ்சித் பண்டார திறமையானவர் என்ற போதிலும் கொள்கை ரீதியலான முரண்பாடு உள்ளது.
அவரின் பெயரை மகிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்து அதனை ரோஹித அபேகுணவர்த்தன வழி மொழிந்தார்.
ஆளுங்கட்சி சார்பிலேயே இந்தத்தேர்வு இடம்பெற்றுள்ளது. எனவே , இந்தக்குழு ஊடாக அரச நிறுவனங்கள் தொடர்பில் எவ்வாறு விசாரணை நடத்துவது, எனவே, கோபா குழுவின் தலைவராகச் செயற்படுவது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.