தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி சிறிலங்கா அதிபருக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்!

Ranil Wickremesinghe Sri Lanka Prisons in Sri Lanka
By Kalaimathy Nov 15, 2022 11:38 AM GMT
Report

தமிழ் அரசியல் கைதியாக இருபத்தேழு வருடங்களாக சிறையில் இருக்கின்ற சகோதரனை விடுவிக்க வேண்டும் என சகோதரி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் என்பவரின் சகோதரி வாஹினி என்ற பெண்ணே இவ்வாறு கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதெனவும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் அண்ணாவும் நானும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலமாக விடுதலை விடுதலை எனக்கூறி அந்த விடுதலை கிடைக்கவில்லை. எதிர்வரும் பொங்கலுக்குள் அண்ணா வருவார் என்று நம்புகிறோம்.

பொதுமன்னிப்பில் விடுதலை

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி சிறிலங்கா அதிபருக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்! | Sri Lanka Political Prisoner Release Preass Meet

அம்மா அப்பா இல்லாத நேரத்தில் எங்களுடன் இணைந்து அண்ணா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அண்ணா 18 வயதில் சிறைசென்று 46 வயதாகிவிட்டது.

அண்ணாவின் விடுதலையை எதிர்பார்த்து அம்மா உயிரிழந்துவிட்டார். அண்ணாவின் வாழ்க்கை சிறையில் முடிந்துவிடாமல் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனைய அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்பபையில் விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில், அண்மையில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி வேலாயுதம் வரதராஜன் கருத்து தெரிவிக்கையில்,

அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையாக வேண்டும்

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி சிறிலங்கா அதிபருக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்! | Sri Lanka Political Prisoner Release Preass Meet

23 வருட சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு சிறிலங்கா அதிபரால்  வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்று வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் இணைந்து மகிழ்வாக இருக்கின்றேன்.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. எமது விடுதலையை சாத்தியப்படுத்திய அதிபருக்கும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கும் மிக்க நன்றிகளை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

எமது விடுதலைக்காக இதயசுத்தியுடன் செயற்பட்ட ஒவ்வொரு அமைப்புகளுக்கும் இவ்விடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் இறுதி அரசியல் கைதியை விடுதலை செய்யும் வரை இந்த விடயத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்வாக வாழ வழிசெய்ய வேண்டும்.

விடுதலையானவர்களுக்கு உதவித் தொகை

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி சிறிலங்கா அதிபருக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்! | Sri Lanka Political Prisoner Release Preass Meet

நீண்ட காலம் சிறையிலிருக்கும் கைதிகள் மிகவும் பின் தங்கிய பூச்சிய நிலையிலேயே இருக்கின்றார்கள். அதனால் நமது சமூகத்தில் அக்கறை கொண்ட அமைப்புகள் விடுதலைபெற்று வந்தவர்கள் சமூகத்தில் வாழ்வை ஆரம்பித்து முன்கொண்டு செல்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

அத்துடன், அண்மையில் விடுவிக்கப்பட 8 அரசியல் கைதிகளுக்கும் அமைப்பொன்றினால் உதவிதொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கும் இந்நேரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் கருத்து தெரிவிக்கையில்,

சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 33 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி