அமைச்சர் சந்திரசேகரனை அதிரடியாக காய்வெட்டிய அநுர!
2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் முக்கிய நகரங்களில் இடம்பெற்ற வாணவேடிக்கைகளின் ஓய்வுக்கு வந்தாலும் இலங்கையில் 2026 இல் தீவிர அரசியல் வாணவேடிக்கை நிகழ்சிகள் தொடருமென்பது ஊகிக்கத்தக்கது.
புத்தாண்டு தினத்தில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது அரசியல் பங்காளியுடன் திடீர் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
இந்தநிலையில் தித்வா சுறாவளியால் சிதிலப்பட்ட ஜனாதிபதி இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கபட்பட்ட செயலணியில் தனது தமிழ் தோழரும் அண்மையில் சுயேச்சை அர்ச்சுனாவின் இடுப்பில் கிள்ளியவருமான அமைச்சர் சந்திரசேகரன் உள்ளடக்கப்படாதமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டுக் களிப்புடன் 2026 க்குள் உலகம் நுழைந்த நிலையில் இந்த ஆண்டை மையப்படுத்தி சோதிடர்கள் மற்றும் குறிசொல்லிகளின் சில கணிப்புகளும பரபரப்புக்களாக உள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |