பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது! (படங்கள்)
sri lanka
people
politics
terrorism prohibition act
By Thavathevan
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெறும் நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது.
நாடு பூராகவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.
நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்பட பல்வேறு செயல்களுக்குக் காரணமாகஅமைந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குறித்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி