மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

SLPP Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sagara Kariyawasam
By Eunice Ruth Feb 16, 2024 06:00 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கப் போவதில்லை என அண்மையில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததையடுத்து, இவ்வாறாக கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாற்று கருத்துக்கள்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Politics Rajapaksa President Election

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

தமிழரசுக் கட்சிக்காக முன்னிலையாகும் சுமந்திரன்! தெரியாது என்கிறார் சிறீதரன்

அத்துடன், தனது கட்சி சார்பில் எந்தவொரு வேட்பாளரும் அதிபர் தேர்தலில் களமிறங்கப்போவதில்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்பது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்களின் விருப்பம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குழப்பங்கள்

இந்த நிலையில், இவ்வாறான மாற்று கருத்துக்கள் கட்சியினருக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமா எனும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2024ல் பணக்கார நாடு எது தெரியுமா!

2024ல் பணக்கார நாடு எது தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016