2024ல் பணக்கார நாடு எது தெரியுமா!
உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் லக்சம்பர்க்(Luxembourg) முதலிடம் பெற்றுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பொதுவாக ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவுருவாகவும் கருதப்படுகிறது.
பணக்கார நாடுகள்
ஒரு நாட்டின் மொத்த ஜிடிபியை அதன் மொத்த மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் ஒரு நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
இது ஒரு நாட்டின் பொது மக்களில் எவ்வளவு பேர் பணக்காரர்கள் அல்லது ஏழைகள் என்பதை அறிய உதவுகிறது. அந்த வகையில் தற்போது தனிநபர் GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் லக்சம்பர்க்(Luxembourg) நாடும், பத்தாவது இடத்தில் மக்காவோ சர்(Macao SAR) நாடும் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில், இந்தியா 129வது இடத்தில் இரண்டாவது இடத்தில் அயர்லாந்தும் 3வது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 4வது இடத்தில் நோர்வே, சிங்கப்பூர் (5), ஐஸ்லாந்து (6), கத்தார் (7), அமெரிக்கா (8) டென்மார்க் (9), மக்காவோ சர் (10). இதில் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது.
ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |