மின் கட்டணங்கள் தொடர்பில் அடுத்த ஆண்டு நடைமுறையாகும் புதிய திட்டம்!
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் நாடளாவிய உயரதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மின்சாரசபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகள்
இதற்கமைய, காகிதமல்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், தெரு விளக்குகளை முறையாக பொருத்துதல் மற்றும் இயக்குவதை ஒழுங்குபடுத்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளி சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகளை உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1) A meeting was held with the AGMs & DGMs of CEB. Islandwide DGMs connected online. Discussed steps taken to reduce expenses & further steps that could be taken to reduce the costs at CEB. Instructions were given to hold the ongoing construction work of the CEB new headquarters. pic.twitter.com/IKibMaWqXx
— Kanchana Wijesekera (@kanchana_wij) December 7, 2022