இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பிலான தகவல் வெளியாகின!
sri lanka
people
power cut
Janaka Ratnayake
By Thavathevan
நாட்டில் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரமும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேரமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை எட்டு முப்பது மணி தொடக்கம் மாலை ஐந்து முப்பது மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரமும் மாலை ஐந்து முப்பது மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி