அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் விரைவில் - வெளியானது அறிவிப்பு!

Ranil Wickremesinghe Prime minister Sri Lanka Sri Lanka Cabinet President of Sri lanka
By Kalaimathy Jul 21, 2022 08:07 AM GMT
Report

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பிரதமர் பதவியினை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

புதிய அமைச்சரவை நியமனம்

அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் விரைவில் - வெளியானது அறிவிப்பு! | Sri Lanka President Government Cabinet Ranil

இந்நிலையில், புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  

அத்துடன், 20 முதல் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதில் அதிகளவான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

ரணில் அழைப்பு

அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் விரைவில் - வெளியானது அறிவிப்பு! | Sri Lanka President Government Cabinet Ranil

தமக்கு எதிராக போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026