ரணிலின் உரை மீதான விவாதம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
சிறிலங்கா அதிபர் இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 9ஆம் திகதியும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 10ஆம் திகதியும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
