நாட்டு மக்கள் விரும்பாத முடிவுகளையும் எடுக்கத் தயார் - ரணிலின் கொள்கை விளக்க உரை!
நாட்டில் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும், நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
இதனைத் தொடர்ந்து அதிபரால் ஆற்றப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் பலன்களை எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு
இதேவேளை தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிவதோடு, இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களையும் குறைக்க முடியும்.
மேலும் நான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கே செயற்பட்டு வருகின்றேன்” எனவும் தனது கொள்கை விளக்க உரையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார்.
மீளக் கட்டியெழுப்பும் திட்டம்
இன்றைய உன்பதாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன வருகையும், அதனைத் தொடர்ந்து அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதற்பெண்மணியின் வருகையும் இடம்பெற்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)