ரணிலின் பதவியேற்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு நாடாளுமன்றத்தின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
ரணில் முன்வைத்த கோரிக்கை

இதேவேளை, புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி