சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- நாளை முதல் மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!
sri lanka
bus
government
transport
private
desel
By Kalaimathy
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமக்கு போதிய டீசல் கையிருப்பை வழங்க அதிகாரிகள் தவறினால், நாளை பேருந்து சேவையில் இருந்து விலகுவோம் என தனியார் பேருந்து சங்கத்தினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
