அதிபர் மாளிகையில் பணக்கட்டுகளை எண்ணிய இளைஞன் கைது..!
அதிபர் மாளிகையில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளார் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் அதிபர் மாளிகையில் உள்ள பணக்கட்டுகளை எண்ணிய நபர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைரலான காணொளி
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்தவர் என்றும் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் அதிபர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முற்றுகையிடப்பட்ட அதிபர் மாளிகை
[
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
இதேவேளை, முற்றுகையிடப்பட்ட அதிபர் மாளிகை சில நாட்கள் பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அதிபர் மாளிகை பாதுகாப்பு படையினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
முற்றுகையின் போது அதிபர் மாளிகை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
