இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் நடக்காத ஒரு அவலம் - மனம் வருந்தும் முன்னாள் அதிபர்!
இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் நடக்காத ஒரு அவலம் தற்போது இடம்பெற்று வருகின்றது என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதிகாரத்தின் முன் கிறுக்குத்தனமான சிறு கும்பல் இந்த நாட்டை முற்றாக அழிக்க செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிபர் மற்றும் செயற்குழு அதிபரின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது இருமுறை சிந்திக்குமாறும் அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது தெரிவித்துள்ளார்.
நாட்டை தொடர்ந்தும் அராஜகம் செய்யாமல் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.