பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது மிகவும் கவலைக்குரியது!
போராட்டகாரர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவது மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிலரை தடுத்து வைத்துள்ளமை என்பன மிகவும் கவலைக்குரிய விடயங்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது மெதுவாக வழமையான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது எனவும் பின்நோக்கி செல்லாமல் முன்நோக்கி செல்ல வேண்டிய காலம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
It is deeply concerning to see so many arrests of protesters and detaining some under terrorism laws. We are slowly limping to normalcy. This is the time to look forward not backwards. To err is human to forgive devine.
— Sanath Jayasuriya (@Sanath07) August 22, 2022
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தவறு செய்தால் மன்னிப்பது மனிதன்மை எனவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்கள் தொடர் கைது
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் கடந்த ஜூலை 9 ஆம் திகதி வரை நாட்டில் நடந்த பாரிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மேற்குலகுகள் பலவும்

